லகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 5லட்சத்து 37ஆயிரத்து, 873 ஆக  உயர்ந்துள்ளது. மேலும, வைரஸ் தொற்றுக்கு பலியானோர்களின் எண்ணிக்கை 24,149 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பால் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரமாக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக  உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,149 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்து உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தெரிவித்து உள்ளது.

கொரோனா உயிரிழப்பில் இத்தாலி முதலிடத்திலும் ஸ்பெயின் 2வது இடத்திலும், சீனா 3வது இடத்திலும், அமெரிக்கா 4வது இடத்திலும் உள்ளது.

இத்தாலியில் 8,215 பேரும்,  ஸ்பெயினில் 4,365 பேரும், சீனாவில் 3,287 பேரும்,  அமெரிக்காவில் 1,293 பேரும் பலியாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அதுபோல கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அமெரிக்கர்கள் – 85,594 பேரும், இத்தாலி நாட்டினர் – 80,589 பேரும், ஸ்பெயின் நாட்டினர்  57,786 பேரும்,  ஜெர்மன் நாட்டினர் 43,938 பேரும், ஈரான் – 29,406, பிரான்ஸ் – 29,155 சுவிஸ் – 11,811 பிரிட்டன் – 11,658 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துஉள்ளது.

உலகம் உழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 124,564 பேர் குணமடைந்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.