துபாய்:

லகிலேயே மிக உயரமான சொகுசு நட்சத்திர விடுதி துபாயில் திறக்கப்பட்டுள்ளது.

துபாய் நாட்டில் சேக் சையது சாலையில் உலகிலேயே மிக உயரமான சொகுசு நட்சத்திர விடுதியன் கட்டுமானம் கடந்த 2008-ம் வருடம்   துவங்கியது.  இந்த விடுதியின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து இன்று திறக்கப்பட்டது.

இந்த நட்சத்திர விடுதி  75 மாடிகளை கொண்டது. 528 விருந்தினர்கள் அறைகள் கொண்ட இந்த விடுதியில் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், நான்கு உணவகங்கள்,  திறந்தவெளி நீச்சல்குளம், சொகுசு குளியல் அறை, மசாஜ் அறை, தண்ணீரை பீய்ச்சி மசாஜ் செய்யும் ஜக்குஜி உள்ளிட்ட வசதிகள்   இடம் பெற்றுள்ளன.

ஜவோரா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த விடுதி  தங்க நிற கோபுரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம்  356 மீட்டர்(1,168 அடி) உயரம்  ஆகும். அதாவது சுமார் கால் மைல் தொலைவு உயரம் கொண்டதாகும்.

2020ம் ஆண்டுக்குள் வருடத்துக்கு 2 கோடி சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் திட்டத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் நாடு சுற்றுலாத்துறையை மேம்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

இந்த ஓட்டல் உலகின் மிக உயரமான விடுதியாக கருதப்படும் துபாயின் ஜே.டபிள்யு. மரியாட் மார்க்குஸ் விடுதியை விடவும் ஒரு மீட்டர் கூடுதலான உயரம் கொண்டது.