வாஷிங்டன்

லகில் அதிகம் உழைக்கும் ஜனாதிபதி எனப் பரிசளித்தால் அது தமக்குத் தான் கிடைக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படத்தில் ஒரு புகழ்பெற்ற வசனம் உண்டு, “நாதஸ் இப்ப திருந்திட்டானாம்.”  “யாரு சொன்னது” “அவனே அவனைப்பற்றிச் சொன்னது” என்னும் வசனம் அது.    அதைப் போல் நடிகர் நெப்போலியன் ஒரு படத்தில் ”கல்யாண வீடுன்னா அங்கே நான் மாப்பிள்ளையா இருக்கணும்.   இழவு வீடுன்னால் நான் அங்கே பிணமா இருக்கணும்” என்பார்.

இந்த நிழல் வசனத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிஜமாக்கி உள்ளார்

சமீபத்தில் அவர் தனது டிவிட்டர் பதிவு ஒன்றில் ”என்னை அறிந்த மக்களும் நமது நாட்டின் சரித்திரத்தை உணர்ந்த மக்களும் நானே உலகில் கடுமையாக உழைக்கும் ஜனாதிபதி என்பதை அறிவார்கள்.   எனக்கு அதைப் பற்றித்  தெரியாது..  ஆனால் நான் ஒரு கடுமையா உழைப்பளி மற்றும் கடந்த மூன்றரை வருடங்களில் எந்த ஒரு ஜனாதிபதியும் செய்யாத அளவு கடமைகளை நான் செய்துள்ளேன்.”  எனத் தன்னைப் பற்றித் தானே சொல்லிக் கொண்டுள்ளார்.

அடுத்த டிவிட்டர் பதிவில், “நான் விடியற்காலை முதல் நள்ளிரவு வரை பணி புரிகின்றேன்.  மருத்துவமனை,, கப்பல் படைகள், வர்த்தக ஒப்பந்தம், ராணுவ சீரமைப்புக்காக மட்டுமே வெளியில் சென்றுள்ளேனே தவிர மற்ற பொழுதெல்லாம் நான் வெள்ளை மாளிகையின் நாயகனாகவே பணி ஆற்றி உள்ளேன்.”  எனப் பதிந்துள்ளார்.

மற்றொரு டிவிட்டர் பதிவில், “என்னைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு மூன்றாம் தர நபர் எனது உணவு பழக்கம் குறித்து எழுதுகிறார்.   நான் எனது அலுவலகத்தில் நள்ளிரவு வரை ஒருவனாக அமர்ந்து வெறும் பர்கர் மற்றும் டயட் கோக் ஆகியவற்றை உட்கொண்டு எனது படுக்கை அறையிலும் பணி செய்கிறேன்.   இவ்வளவு உழைக்க உங்களால் எப்படி முடிகிறது என் என்னைச் சுற்றி உள்ளவர்களே அதிசயிக்கின்றனர்”  எனப் பதிந்துள்ளார்.