சர்வதேச சாதனையாளர்கள் குறித்த விவரங்களை புள்ளி விவரத்துடன் தெரிவிக்கும் பத்திரிகை- போர்ப்ஸ். இந்த பத்திரிகை, உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் பட்டியலை வெளியிட்டுள்ளது.
‘’MODERN FAMILY’’ நடிகையான ‘’SOFIA VERGARA’’ உலகில் அதிகம் சம்பளம் பெறும் நடிகை என போர்ப்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 12 மாதங்களில் அவர் 315 கோடியே 21 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.
கொலம்பியாவை பூர்வீகமாக கொண்ட 48 வயது சோபியா, ‘ AMERICA’S GOT TELENT’’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடுவராகவும் உள்ளார்.
இந்த தொடரின் ஒவ்வொரு சீசனுக்கும் அவருக்கு 73 கோடியே 32 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் சினிமா ஷுட்டிங் முடங்கி உள்ள நிலையில், டி.வி. ஷோக்கள் தான் , இப்போது நடிகைகளுக்கு கை கொடுக்கின்றன.
ஆஸ்கர் விருது பெற்ற ஏஞ்சலினா ஜோலி, 256 கோடி ரூபாய் சம்பாதித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
-பா.பாரதி.