வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,22,83,576 ஆகி இதுவரை 17,95,046 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,89,556 பேர் அதிகரித்து மொத்தம் 8,22,83,576 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 13,266 பேர் அதிகரித்து மொத்தம் 17,95,046 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 5,83,09,479 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,21,79,051 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,77,704 பேர் அதிகரித்து மொத்தம் 1,99,59,422 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,261 அதிகரித்து மொத்தம் 3,46,442 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,18,35,978 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,529 பேர் அதிகரித்து மொத்தம் 1,02,45,326 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 285 அதிகரித்து மொத்தம் 1,48,475 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 98,33,339 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57,227 பேர் அதிகரித்து மொத்தம் 75,64,117 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,075 அதிகரித்து மொத்தம் 1,92,716 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 66,47,538 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,202 பேர் அதிகரித்து மொத்தம் 31,05,037 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 562 அதிகரித்து மொத்தம் 55,827 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 24,96,183 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,395  பேர் அதிகரித்து மொத்தம் 25,74,041 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 468 அதிகரித்து மொத்தம் 64,078 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,91,806 பேர் குணம் அடைந்துள்ளனர்.