வாஷிங்டன்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,41,872 உயர்ந்து 83,93,096 ஆகி இதுவரை 4,50,452 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,41,872 பேர் அதிகரித்து மொத்தம் 83,93,096 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,264 அதிகரித்து மொத்தம் 4,50,452 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 44,10,905 பேர் குணம் அடைந்துள்ளனர்.  54,451 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,071 பேர் அதிகரித்து மொத்தம் 22,34,471 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 809 அதிகரித்து மொத்தம் 1,19,941 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 9,18,394 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,475  பேர் அதிகரித்து மொத்தம் 9,60,309 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,209 அதிகரித்து மொத்தம் 46,665 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 5,03,507 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,843  பேர் அதிகரித்து மொத்தம் 5,53,301 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 194 அதிகரித்து மொத்தம் 7,478 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,04,342 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,103  பேர் அதிகரித்து மொத்தம் 3,67,264 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 341 அதிகரித்து மொத்தம் 12,262 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,94,438 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று 1115 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 2,99,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு நேற்று 184 பேர் உயிர் இழந்து மொத்த எண்ணிக்கை 42,153 ஆக உள்ளது.