உலக சிறுநீரக தினம் இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்ட வருகிறது. இன்றைய நாளில், சிறுநீரக பாதிப்பில் இருந்து தப்பிக்க அனைவரும் குடிநீர் தேவையான அளவு அருந்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சிறுநீரக பாதுகாப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மார்ச் மாதம் 2–வது வியாழக்கிழமை ‘உலக சிறுநீரக தினம்’ ஆண்டுதோறும் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான உலக சிறுநீரக தினம் இன்று (மார்ச் 14ந்தேதி) கடைபிடிக்கப்படுகிறது.
நாம் உண்ணும் உணவுபொருட்களில் கலக்கப்படும் நச்சுப்பொருட்கள் வடிகட்டப்பட்டு, அது சிறுநீராக வெளியேறி வருகிறது. இந்த பணியை திறம்பட செய்து வருவது நமது முதுக்குக்கும், இடுப்பு பகுதிக்கும் இடையே, முதுகெலும்பின் பாதுகாப்பில் உள்ள இரண்டு சிறு நீரகங்கள்தான்.
இந்த சிறுநீரகம் திறம்பட பணியாற்ற வேண்டுமென்றால், நாம் நிறை தண்ணீர் குடிக்க வேண்டும். நாம் குடிக்கும் தண்ணீரின் அளவுக்கேற்பதான் சிறுநீரகம் தனது பணியை ஒழுங்காக செய்யும். .
பொதுவாக மனிதர்களுக்கு இரண்டு சிறுநீரகம் உண்டு. சிலருக்கு அபூர்வமாக ஒரு சிறுநீரகம் அமைந்து விடுவதுண்டு. அவர்களும் இந்த உலகில் ஆரோக்கியமாகத்தான் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போதை நவீன உணவு பழக்க வழங்களினால் மக்களிடையே சிறுநீரக பாதிப்பு அதிகரித்து வருகிறது. பெரும்பாலோருக்கு சிறுநீரகத்தில் கல் தோன்றுவது பெரும் பிரச்சினையை ஏற்படுத்துகிறது.
அதுபோல சிறுநீரகத்தில் கட்டி சிறுநீரகத் நோய்த்தொற்று போன்ற காரணங் களால் சிறுநீரகங்கள் செயலிழந்து விடுகின்றன. இதுபோன்ற நோயக்களை தொடக்கத்திலேயே கண்டறிந்தோமானால், சிறுநீரகம் செயலிழப்பை தடுத்து விடலாம்..ஆனால் நிறைய பேர், சிறுநீரகம் முழுவதுமாக செயலிழந்த நிலையிலேயே மருத்துவர்களை நாடுகின்றனர். அவர்களுக்கு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்… அதற்காக சிறுநீரகம் தானம் தருபவர் யார் என்று தேடியலைய வேண்டும்….
இதுபோன்ற செயல்களை தடுக்கும் பொருட்டே உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்பட்டு வரு கிறது. இன்றைய தினம் பெரும்பாலான மருத்துவமனைகள், சமூக அமைப்புகள் இதுகுறித்து விழிப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
நாம் ஒவ்வொருவரும் சிறுநீரக பாதிப்பில் இருந்து தப்பிக்க அதிக அளவில், நமது உடலுக்கு தேவையான குடிநீரை குடித்து, சிறுநீரகத்தை பாதுகாப்போம் என்று இன்றைய நாளில் உறுதி ஏற்போம்..