லிஃபோர்னியா

நேற்று சுமார் 8 மணி நேரம் முகநூல் முடங்கியதால் உபயோகிப்பாளர்கள் கடும் துயருற்றுள்ளனர்.

உலகெங்கும் ஏராளமானோர்  முகநூல், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர், வாட்ஸ்அப், டிவிட்டர் உள்ளிட்ட சமுக வலைதளங்களை உபயோகித்து வருகின்றனர்.   பலர் தங்களுடைய சொந்த உபயோகம் மட்டுமின்றி அலுவலக உபயோகங்களுக்கும் இந்த வலை தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.   பலரின் வாழ்க்கையில் இது இன்றியமையாத ஒன்றாகி விட்டது.

நேற்று இரவு திடீரென பல உலக நாடுகளில் திடீரென முகநூல் பணி புரியவில்லை.   சுமார் கோடிக்கணக்கானோர் முகநூலில் இணைய முடியாமல் இருந்தனர்.   அத்துடன் இணைந்tஹு இருந்தவர்களாலும் எவ்வித செய்கையும் செய்ய முடியாத நிலை இருந்தது.   கிட்டத்தட்ட முகநூல் முழுவதுமே இருட்டடிப்பில் ஆழ்ந்தது.

உலகின் பல பகுதிகளில் முகநூலின் மற்றொரு தளமான வாட்ஸ்அப் சேவையும் முடங்கியது.   அத்துடன் இன்ஸ்டாகிராம் சேவையும் பல இடங்களில் பாதிப்பு அடைந்தது.   இதனால் முகநூல் தடை செய்யப்பட்டுள்ளதாக பலரும் டிவிட்டர் மூலம் புகார் அளிக்க தொடங்கினர்.

சுமார் 8 மணி நேரத்துக்கு பிறகு முகநூல் சேவை மீண்டும் தொடங்கியது.  இது குறித்து முகநூல் நிர்வாகம் வெலியிட்டுள்ள தகவலில், “முகநூல் சுமார் எட்டு மணி நேரம் முடங்கியது.    இது தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்டது.   தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.

ஓரு சில இடங்களில் சிலர் இன்னும் முகநூல் உள்ளிட்ட தளங்களை உபயோகிக்க முடியாமல் உள்ளதாக அறிகிறோம்.   அந்த பழுதும்  சரி செய்யப்பட்டு வருகிறது.  முகநூல் தடை செய்யப்படவில்லை என உறுதி அளிக்கிறோம்” என தெரிவித்துள்ளது.