லண்டன்: உலக மக்களை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல நாடுகள் மருந்துகள் தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், இங்கிலாந்து bகொரோனா தடுப்பு மருந்தான பிஃபைசர் தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. உலக நாடுகளிலேயே கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கிய முதல்நாடாக இங்கிலாந்து திகழ்கிறது. இதன் காரணமாக அடுத்தவாரம் முதல் பிஃபைசர் தடுப்பூசி பயன்பாட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மன் நிறுவனமான பயோடெக் நிறுவனத்துடன்  இணைந்து அமெரிக்காவைச்சேர்ந்த பிஃபைசர் (PFizer) நிறுவனம், கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாகவும், 95 சதவிகிதம் செயல்திறன் உடையதாக இருப்பதாகவும் ஏற்கனவே அறிவித்தது.  பைசர் பயோன்டெக் நிறுவனமும் ஆர்என்ஏ தொழில்நுட்ப அடிப்படையில் கொரோனா தடுப்பூசி மருந்தை உருவாக்கி உள்ளது. இந்த மருந்தின் செயல்திறன் 95 சதவீதம் என உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் என்ற உறைநிலையில் வைத்து மருந்தை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், தற்போது பிஃபைசர் தடுப்பூசி பயன்பாட்டுக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. ஃபைசர் / பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரவலான பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடு என்ற பெயரை இங்கிலாந்து பெற்றுள்ளது.

இதுகுறித்துகூறிய இங்கிலாந்து நாட்டின் கொரோனா கட்டுப்பாட்டாளர்  ஜாப், இந்த தடுப்பூசி  கோவிட் -19 நோய்க்கு எதிராக 95% வரை பாதுகாப்பை வழங்கும், இது அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வர உள்ளது.  முதல்கட்டமாக,  வயதானவர்கள், பாதிக்கப்படக்கூடிய நோயாளிகள்  உள்பட  உடனடி தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கப்பட உள்ளது.

இங்கிலாந்து ஏற்கனவே 40மில்லியன்  டோஸஸ் அளவை ஆர்டர் செய்துள்ளது.  அது 20 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட போதுமானது என்றும், சுமார் 10மில்லியன் டோஸ் விரைவில் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தவர். இதன் மூலம் வரும் நாட்களில்  800000 பேருக்கு போடப்படும் என்று கூறினார். நாட்டு மக்களுக்கு இந்த தடுப்பூசை வழங்க  ஒரு தசாப்தம் நீடிக்கும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள பிரதமர்   போரிஸ் ஜான்சன் “தடுப்பூசிகளின் பாதுகாப்பு,  நம் வாழ்க்கையை மீட்டெடுக்கவும் பொருளாதாரத்தை மீண்டும் நகர்த்தவும் அனுமதிக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கூறிய அந்நாட்டின்  சுகாதார செயலாளர் மாட் ஹான்காக்,  கொரோனா தடுப்பூசி காரணமாக, ​​ “வசந்த காலத்தில் இருந்து, ஈஸ்டர் முதல் உள்ள விஷயங்கள் சிறப்பாக இருக்கும், அடுத்த ஆண்டு ஒரு கோடைகாலத்தை எல்லோரும்  சிறப்பாக அனுபவிக்கப் போகிறோம், இப்போது நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

NHS தலைமை நிர்வாகி சர் சைமன் ஸ்டீவன்ஸ், சுகாதார சேவை “நம் நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான தடுப்பூசி பிரச்சாரத்திற்கு” தயாராகி வருகிறது என்றார்.

பிஃபைசர் தடுப்பூசியை சேமித்து வைத்து, நாடு முழுவதும  சுமார் 50 மருத்துவமனைகள் காத்திருப்புடன் உள்ளன, மாநாட்டு மையங்கள் போன்ற இடங்களில் தடுப்பூசி மையங்கள் இப்போது அமைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி தொடங்கலாம் என்றாலும், மக்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் பரவுவதை நிறுத்த கொரோனா வைரஸ் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவ  நிபுணர்கள் கூறுகின்றனர்.

“மிகவும் பயனுள்ள தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கான முதல் அவசர ஒப்புதல் எங்களிடம் உள்ளது. உண்மையிலேயே வீரமானது.” இது அறிவியலுக்கான வெற்றி என்று ஃபைசர் நிறுவனம் தெரிவித்து உள்ளது.