தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க, ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்படும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழா பெரும் புகழ் பெற்றது. இந்த திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித் தேரானது மற்ற ஊர் தேர்களை போல் எண்பட்டை அறுகோணம்,வட்டவடிவமைப்பு போன்று இல்லாமல் பட்டை வடிவ அமைப்பினை கொண்டதாகும். மொத்தம் 20 பட்டைகளை கொண்ட இந்த தேரானது நான்கு அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்பகுதி 20 அடி உயரமும், 2வது பகுதி 4அடி உயரமும்,3வது பகுதி 3அடி உயரமும் கொண்டதாகவும். இறுதியாக 4வது பகுதியாக தேரின் மேடை பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் தேரோட்டத்தின் போது தியாகரஜசுவாமி அமர்ந்து வலம் வருவது வழக்கம்.மொத்தம் 20 பட்டைகளை கொண்ட இந்த தேரானது நான்கு அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்பகுதி 20 அடி உயரமும், 2வது பகுதி 4அடி உயரமும்,3வது பகுதி 3அடி உயரமும் கொண்டதாகவும். இறுதியாக 4வது பகுதியாக தேரின் மேடை பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் தேரோட்டத்தின் போது தியாகரஜசுவாமி அமர்ந்து வலம் வருவது வழக்கம்.
இந்த பாரம்பரியமான பங்குனித் தேரோட்டம் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி நடைபெறுவதையொட்டி தேரின் கட்டுமான பணிக்காக, தேர் பாதுகாப்பாக அடைத்து வைக்கப் பட்டிருந்த கண்ணாடி கூண்டுகள் பிரிக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதமே தொடங்கி நடைபெற்று வந்தது. 40 நாட்கள் நடைபெறும் இந்த பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.
திருவாரூர் தியாகராசரின் பங்கு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம்.
நடப்பாண்டிலும் இந்த பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரமானது வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி வரும் நிலையில் இந்த தேதியில் தேரோட்டம் நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக தைபூச நாளில் பந்தகால் முகூர்த்த நிகழ்ச்சியானது நடைபெறும் நிலையில் கடந்த பிப்ரவரி 11ம் தேதி தியாகராஜசுவாமி கோயிலிலிருந்து திருஞானசம்பந்தர் எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் பந்தகால் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏப்ரல் 6 , 2025 அன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சுமார் 7 மணிக்கு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் யாதஸ்தானத்திலிருந்து ஆழித்தேருக்கு அஜப நாதனம் செய்து விட்டு விட்டவாசல் வழியாகச் செல்வார்.
ஏப்ரல் 7 , 2025 (திங்கட்கிழமை): கோயிலின் வீதிகளில் 5 தெய்வங்களின் தேரோட்டத்தின் நேரங்கள் பின்வருமாறு.
காலை 5 மணி முதல் 6 மணி வரை – ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியரின் திருத்தேர் முதலில் இழுக்கப்படும்.
காலை ( நேரம் விரைவில் புதுப்பிக்கப்படும்.. ) – ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆழித்தேர் வடம் பிடித்தல்
காலை சுமார் 11 மணியளவில் – ஸ்ரீ நீலோத்பலாம்பா அம்பாள் திருதேர் வடம் பிடித்தல்
மதியம் சுமார் 1 மணிக்கு – ஸ்ரீ சண்டிகேஸ்வரர் திருத்தேர் இழுக்கப்படும்.
பக்தர்கள் தேர் இழுக்கும்போது ‘ ஆருரா.., தியாகேசா… ‘ என்று கோஷமிடுவார்கள்.
ஆழி தேர் & அம்பாள் தேர் மாலை சுமார் 6 மணி முதல் 7 மணி வரை இந்திய நேரப்படி நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவாரூர் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் தொடர்பான பூஜைகள் வழிபாடுகள், கடந்த மார்ச் 13ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
36 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா பாரம்பரியத்தின் படி, முதல் நாளான மார்ச் 15, 2025 – சனிக்கிழமை
கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமணியர் உற்சவம், பக்தோற்சவம் அதாவது, அடியார் கூடும் திருவிழா‘, ஸ்ரீ காலபைரவர் திருவிழா, அம்பாள் காட்சி கொடுத்த நாயனார் திருவிழா, ஸ்ரீ சந்திரசேகரர் பட்டோற்சவம், ஸ்ரீ சந்திரசேகரர் ஸ்வாமி கேடக உற்சவம் நடைபெற்று வந்தன.
இன்று (மார்ச் 31, 2025 – நாள்-17) காலை சுமார் 10 மணி முதல் – புத்திரடம் கொண்டர் உச்சி காலம் பிரசனார்த்தம் – வன்மீகநாதருக்கு சஹஸ்ர கலசாபிஷேகம் உற்சவம் நடைபெற்றது.
நாளை ‘ 1 ஏப்ரல், 2025 – செவ்வாய் – நாள்-18
— தியாகராஜர் வசந்த உற்சவம் – அஷ்ட-திக் (என்-திசை) கொடியேற்றம்
2 ஏப்ரல், 2025 – புதன் – நாள்-19
— இந்திர விமானத்தில் சந்திரசேகரர் வீதி உலா
3 ஏப்ரல், 2025 – வியாழன் – நாள்-20
— பூத வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா
4 ஏப்ரல், 2025 – வெள்ளி – நாள்-21
— வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா
5 ஏப்ரல், 2025 – சனி – நாள்-22
— வெள்ளி ரிஷப வாகனம்
6 ஏப்ரல், 2025 – ஞாயிறு – நாள்-23
— காலை: வீரகண்டயம் ஆழி தேர் செல்லுதல்
— மாலை: கைலாச வாகனம்
— இரவு: சுமார் 7 மணி: தேர் பிரவேசம் – பூசம் நட்சத்திர நாளில் திருத்தேர் எழுந்தருளல்
7 ஏப்ரல், 2025 – திங்கள் ( நாள்-24)– ஆயில்யம் நட்சத்திரம் நாளில் ஆழி தேரோட்டம்
8 ஏப்ரல், 2025 – செவ்வாய் – நாள்-25
— காலை: அருள்மிகு தியாகராஜர் பிராயச்சித்த மகாபிஷேகம்
— இரவு 8 மணி: திரிபுரசம்ஹாரமூர்த்தி புறப்பாடு
9 ஏப்ரல், 2025 – புதன் – நாள்-26
— அருள்மிகு தியாகராஜர் சபாபதி மண்டபம் செல்லுதல்
10 ஏப்ரல், 2025 – வியாழன் – நாள்-27- பங்குனி உத்திரம் நன்னாளில் தீர்த்தம் அருளல்
— காலை: சபாபதி தீர்த்தம், கௌதம் தீர்த்தம்
— பிற்பகல் 3 மணி: ஸ்ரீ சந்திரசேகரர் தேவ தீர்த்தம் தருதல்
— இரவு: 10 மணி: அருள்மிகு தியாகராஜர் உத்திர மகா அபிஷேகம்
11 ஏப்ரல், 2025 – வெள்ளி – நாள்-28
— காலை: அருள்மிகு தியாகராஜர் பாத தரிசனம் அருளுதல்
— இரவு: சுவாமி தடாச்சு மண்டபம் எழுந்தருளல் – கிருஷ்ணகாந்த சாயரட்சை – தேவாசிரிய மண்டபம் எழுந்தருளல்
12 ஏப்ரல், 2025 – சனி – நாள்-29
— காலை 8 மணி: அருள்மிகு தியாகராஜர் பக்த காட்சி அபிஷேகம்
— இரவு: 8 மணி – பக்த காட்சி வாழி யாதாஸ்தானம் திருப்புதல்
ஏப்ரல் 13 (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஏப்ரல் 16 (புதன்கிழமை) வரை – அதாவது, நாள்-30 முதல் நாள்-33 வரை
— அம்பாள் உற்சவம்
ஏப்ரல் 17 (வியாழக்கிழமை) முதல் ஏப்ரல் 18 (வெள்ளிக்கிழமை) வரை – அதாவது, நாள்-34 முதல் நாள்-35 வரை
— ஸ்ரீ சண்டிகேஸ்வரர் உற்சவம்
19 ஏப்ரல், 2025 – சனிக்கிழமை – நாள்-36
— உற்சவ கொடியிறக்கம் – திருவிழா போற்றி அதாவது உத்திராடம் நட்சத்திர நாளில் திருவிழா நிறைவு பெறுகிறது – ஆச்சார்யர் ஆசீர்வாதம்.
திருவாரூர் ‘ஆழி தேர்’ – தகவல் & விவரங்கள்
அலங்கரிக்கப்பட்ட ஆழி தேரின் உயரம் 96 அடி . உயரத்தின் முறிவு: சிம்ஹாசனம் 30 அடி உயரம், காட்டுமனம் 66 அடி உயரம். இந்த ஆழி தேரின் மொத்த எடை 300 டன்கள். திருச்சி BHEL நிறுவனம் இந்த தேரை 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக்குடன் நவீனப்படுத்தியுள்ளது . ஒரு இரும்பு சக்கரத்தின் உயரம் 9 அடி. ஆழி தேரை இழுக்கப் பயன்படுத்தப்படும் வடம் (அதாவது, கயிறு) 425 அடி நீளம் கொண்டது – மொத்தம் 4 டன் எடையுள்ள நான்கு கயிறுகள் தேரை இழுக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
-ஆழி தேரில் பிரம்மா, 4 குதிரைகள், யாளி போன்ற சிலைகள் உள்ளன. ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ள அனைத்து தெய்வங்களின் சிற்பத்தையும் ஆழித்தேரில் காணலாம்.
நாயன்மார்கள் இயற்றிய பன்னிரு திருமுறை தேவாரப் பதிகத்தில் திருவாரூர் ஆழித் தேர் குறிப்பிடப்பட்ட சிறப்புடையவர்.
பொதுவாக ஆழி தேரோட்ட நாளில் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி வரும் 7ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர் திருவிழாவின் போது பாதுகாப்புப் பணியில் சுமார் 2000 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள்.