டில்லி,

லக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. டில்லியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்தியா 4 பதக்கங்களை பெற்றுள்ளது.

இன்று நடந்த உலக கோப்பை  10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஜித்து ராய் வெண்கல பதக்கம் வென்றார்.

நேற்று நடைபெற்ற  10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் ஹீனா சித்து, ஜித்து ராய் அணி தங்கப்பதக்கம் வென்றனர்.

இன்றைய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தனது இரண்டாவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார் ஜித்து.

இதன்மூலம் உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 4 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது.