உலக செஸ் சாம்பியனான குகேஷ் இன்று காலை 11 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரெனை தோற்கடித்து உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் குகேஷ்.

தமிழக வீரரான குகேஷ் 18 வயதிலேயே உலக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

சர்வதேச செஸ் சம்மேளனம் சார்பில் குகேசுக்கு பரிசு கோப்பை, பதக்கத்துடன் ரூ.11½ கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

மேலும், தமிழக அரசு சார்பில் அவருக்கு 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து இன்று நாடு திரும்பிய குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், தமிழ்நாடு செஸ் சங்க நிர்வாகிகள், ரசிகர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.