வெலிங்டன்

தொடர்ந்து 17 முறை வெற்றி பெற்று வரும் நியூசிலாந்து அணியை உலக சாம்பியன் டெஸ்ட் போட்டியில் 8 விக்கட் வித்தியாசத்தில் வங்கதேசம் வீழ்த்தி உள்ளது.

தற்போது உலக சாம்பியன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.  தற்போது தொடர்ந்து 17 முறை நியூசிலாந்து உள்நாட்டில் வெற்றி பெற்று வருகிறது.   உலக சாம்பியன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி உடன் வங்கதேச அணி மோதியது.

இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில் 5 விக்கட்டுகளை எடுத்து 147 ரன்களுடன் இருந்த நியூசிலாந்து அணி மேலும் 5 விக்கட்டுகளை 22 ரன்களுக்கு இழந்து  169 ரன்களுக்கு ஆட்டம்  இழந்தது.   வங்கதேசத்துக்கு வெற்றி இலக்காக 40 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது.   மிகவும் எளிதாக வங்கதேச அணி 2 விக்கட்டுகள் இழப்பில் 42 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் சுற்றில் வங்கதேசம் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.  மேலும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேசம் 1-0 என முன்னிலையில் உள்ளது.   இதன் மூலம் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு 2022 ஆம் ஆண்டு நன்கு தொடங்கி உள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2021 இறுதியில் மிகவும் மோசமாக இருந்த வங்கதேச கிரிக்கெட் அணி தற்போது மொமினும் ஹக் தலைமையில் உலக டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை வீழ்த்தியது கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.  இதன் மூலம் வங்கதேச அணி வெளிநாட்டில் 6 ஆவது டெஸ்ட்  வெற்றியைப்  பெற்றுள்ளது.