ஸ்பெயின்:  
லக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் இறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் 26வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் தர வரிசையில் 14ம் இடம் வகிக்கும் இந்தியாவின் ஸ்ரீகாந்த், 19ம் நிலை வீரர் லக்‌ஷயா சென்னுடன் மோதினார். ஸ்ரீகாந்த்,  17-21, 21-14, 21-17 என்ற செட் கணக்கில் லக்‌ஷயா சென்னை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.