டிடிவி தினகரன் – ஓபிஎஸ் சந்திப்பின் முடிவில் இருவரும் இணைந்து செயல்பட முடிவு.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் அமமுக தலைவர் டிடிவி தினகரனை இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

2017ம் ஆண்டு போயஸ் தோட்ட நிகழ்விற்குப் பின் முதல்முறையாக இருவரும் சந்தித்துள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதிமுக-வில் உட்கட்சி பூசல் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக இயங்கி வரும் நிலையில் கட்சியின் கட்டுப்பாடு அனைத்தும் எடப்பாடி வசம் சென்றுள்ளது இந்த நிலையில் டிடிவி உடனான இந்த சந்திப்பு அதிமுக-வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் டிடிவி தினகரனுடனான ஓபிஎஸ் சந்திப்பு சுயநலம் சார்ந்தது என்றும் இதனால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அதிமுக முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஓபிஎஸ் – டிடிவி சந்திப்பின் போது பன்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சரும் அமமுக நிர்வாகியுமான ஜி. செந்தமிழன் ஆகியோர் உடனிருந்தனர்.