ண்டன்

டி எம் எனப்படும் தானியங்கி பணம் தரும் இயந்திரம் இயங்கத்துவங்கி நேற்றுடன் 50 வருடம் நிறைவு பெற்றது.

வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் பேங்கின் என்ஃபீல்ட் கிளையில் 1967 ஆம் வருடம் ஜூன் 27 ஆம் தேதி முதல் ஏடிஎம் துவங்கப் பட்டது.  ஸ்டெஃபர்ட் பிரவுன் என்னும் ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்தவரின் கண்டுபிடிப்பு இந்த ஏ டிஎம்

பிரிட்டிஷ் டிவி தொடர் “ஆன் தி பஸஸ்” மூலம் புகழ் பெற்ற நடிகர் ரெக் வார்னே, இந்த மெசின் மூலம் முதலில் பணம் எடுத்தார்.

ஐம்பது ஆண்டுகள் நிறைவையொட்டி பொன்விழா கொண்டாடும் இந்த ஏடிஎம் மெசின் தங்க நிறத்தில் அலங்காரம் செய்யப்பட்டும், மெசின்  முன்பு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டும்,   அழகு படுத்தப்பட்டிருந்தது.

இப்போது கேஷ் லெஸ் டிரான்சாக்‌ஷன் பரவலாக உலகெங்கும் பேசப் பட்டாலும் இன்றும் ஏடிஎம்  எல்லா இடங்களிலுமே கூட்டம் நிறைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது