கேப்டவுன்:
களிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி நேற்று முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. அதன்படி மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலக்கோப்பையில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெற உள்ளது.

அவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. அதேபோல் ‘பி’ பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

இதில், இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் இன்று (பிப்ரவரி 12ம் தேதி) பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 13 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10 போட்டிகளில் இந்திய அணியும், 3 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 6 டி20 உலக்கோப்பை போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 4 போட்டிகளில் இந்திய அணியும், 2 போட்டிகளில் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது.