மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 207 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுத் 65, ஹெய்லி மேத்யூ 47, அமேலியா 45 ரன்கள் குவித்தனர்.
208 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 64 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது.
இதன்மூலம், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் பெங்களுரு – டெல்லி அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் உத்தரபிரதேசம் – குஜராத் அணிகளும் மோத உள்ளன.