சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் தேசிய ஹாக்கி வீராங்கனை தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோதி குப்தா( வயது 20) என்ற வீராங்கனை தேசிய மகளிர் ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 8.30 மணிக்கு ரேவாரி ரெயில் நிலையம் அருகே சென்றபோது சண்டிகர்- ஜெய்ப்பூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து ஜோதி தற்கொலை செய்து கொண்டார்.
அன்று இரவு 10.30 மணி அளவில் ஜோதியின் செல்போனுக்கு அவரது தாய் அழைத்தார். அதில் பேசிய போலீசார் ஜோதி இறந்த தகவலை தெரிவித்தனர்.
10, 12ம் வகுப்பு சான்றிதழ்களில் சில மாற்றம் செய்ய வேண்டியுள்ளது என்று கூறிவிட்டு ரோதக் சென்ற ஜோதி தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.