லக்னோ: தென்னாப்பிரிக்க பெண்கள் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், இந்தியப் பெண்கள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் தொடங்கியுள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணியே கைப்பற்றியது.
இந்நிலையில், முதல் டி-20 போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க பெண்கள் அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது.
இதனிடையே களமிறங்கிய இந்திய பெண்கள் அணியில், கேப்டன் ஸ்மிருதி மந்தனா 11 ரன்கள் மட்டுமே அடித்தார். பின்னர், ஹர்லீன் தியோல் 52 ரன்களையும், ஜெமிமா 30 ரன்களையும் அடித்தனர்.
ஆனால், யாரும் அதிரடியாக ஆடாத காரணத்தால், 20 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 130 ரன்களை மட்டுமே எடுத்தது.
பின்னர், எளிய இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியில், அனேகா போஸ்ச் 66 ரன்களையும், கேப்டன் சுனே லூஸ் 43 ரன்களையும் அடித்து வெற்றியை உறுதிசெய்தனர்.
19.1 ஓவர்களில், 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்த தென்னாப்பிரிக்கா, 33 ரன்களை எடுத்து வென்றது.