லண்டன்:
மகளிர் உலககோப்பை கிரிக்கெட்டி லீக் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
மகளிர் உலக கோப்பையில் இன்று மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியும், ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. டெர்பியில் இந்த போட்டி நடைபெற்றது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.
முதலில் பேட் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. 282 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.