ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

லண்டன்:

உலக ஹாக்கி லீக் அரையிறுதி சுற்றில் இந்திய அணி, பாகிஸ்தானை 6-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

லண்டனில், ஆண்களுக்கான உலக ஹாக்கி லீக் அரையிறுதி சுற்று நடக்கிறது. இதில் கோப்பை வாய்ப்பை இழந்த இந்திய அணி, 5 முதல் 8 வரையிலான இடத்துக்கு போட்டியிடுகிறது.

இன்று நடந்த போட்டியில் இந்திய அணி, தனது பாகிஸ்தானை சந்தித்தது. இதில்இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஏற்கனவே, லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது.

5 முதல் 8 வரையிலான இடத்துக்கு நடந்த மற்றொரு போட்டியில் கனடா அணி, 7-3 என்ற கோல் கணக்கில் சீனாவை வென்றது. இதையடுத்து நாளை மாலை நடக்கும் 5, 6வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, கனடா அணிகள் மோதுகின்றன.


English Summary
world hockey league india won pakistan