அசாமில் பெண்கள் தொடங்கிய பிராந்திய அரசியல் கட்சி..

அசாம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அங்குள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார வியூகங்கள் வகுத்து வரும் நிலையில், எதிர்பாராத புதிய திருப்பமாக அங்குள்ள பெண்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டு  அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

‘’மொகிலார் தளம்’’(MOHILAR DAL) என இந்த பிராந்திய கட்சிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதன் தலைவராக பாபானி போரோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

‘’அனைவருக்கும் சம வாய்ப்பு,  சம மரியாதை வழங்க வேண்டும் என இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது.ஆனால் இந்தியாவில் பெண்களுக்கு அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. மேலும் அரசியலில் ஆணாதிக்கம் தான் தலை தூக்கி உள்ளது. எந்த அரசியல் கட்சியிலும் பெண்களுக்கு உரிய முக்கியத்துவமும் , அங்கீகாரமும் கிடைக்காததால் , பெண்கள் மட்டுமே சேர்ந்து அசாமில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளோம்’’ என்று மொகலார் தள தலைவர் பாபானி போரோ தெரிவித்தார்.

’’பா.ஜ.க. மத அரசியல் செய்வதால் அதனை வரும் சட்டப்பேரவை  தேர்தலில் வீழ்த்த வலிமையான பிராந்திய கட்சி தேவை ’’ என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

-பா.பாரதி.