பீகார்:
பீகாரில் வயதான ஆசிரியரை இரு பெண் காவலர்கள் தாக்கும் வீடியோ வெளியானதால், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள காவல்துறை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருக்கும் நாவல் கிஷோர் பண்டே சைக்கிளில் வீடிற்கு சென்றுள்ளார்.

அப்போது அவரை வழிமறித்த இரு பெண் காவலர்கள் தாக்கியுள்ளனர். காவலர்களை கிண்டல் செய்ததாக கூறி அவர்கள், தன்னை 20 முறை லத்தியால் அடித்ததாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 24 மணி நேரத்தில் அறிக்கை அளிக்க வேண்டுமென காவல்துறை தலைமை உத்தரவிட்டுள்ளது.