புதுடெல்லி:
ர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் (அமெரிக்கா) கிரிக்கெட்டை சேர்க்க முயற்சித்து வருகிறது.

அந்த ஒலிம்பிக்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட் போட்டியை சேர்ப்பதற்கு ஒலிம்பிக் போட்டியின் அமைப்பு குழுவிடம் ஐ.சி.சி. பரிந்துரை செய்துள்ளது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெறுமா? என்பது குறித்து வருகிற அக்டோபர் மாதம் மும்பையில் நடக்கும் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.