கோவை: மகளிர் உரிமைத்தொகை கேட்டு கோவை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்ட  சம்பவம் பெரும் பரபரபபை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு வழங்கும் பெண்களுக்கான மாதம் ரூ.100 உரிமை தொகை திட்டம் பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், தாங்கள் பல முறை விண்ணப்பித்தும், தங்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என கோவையில் பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று கோவை ஈரோடு, திருப்பூர்  மாவட்ட மக்களின் கனவு திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதலைச்சர்  தொடங்கி வைத்தார். இந்த நிலையில் கோவை பகுதியில் மகளிர் உதவி தொகை சிறப்பு முகாம் நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பதவின. இதையடுத்து,  ஏராளமான பெண்கடள்  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்சியர் அலுவலகம் வாயில் கூடிய பெண்கள், தாங்கள் மகளிர் உரிமைத்தொகைக்காக பலமுறை விண்ணப்பித்தும் தங்களுக்கு இதுவரையிலும் பணம் கிடைக்கவில்லை எனவும், இந்த சிறப்பு முகாமில் எங்களுக்குப் பணம் கிடைக்கும் என்று நம்பி வந்ததாகவும், ஆனால் அதுபோல எந்தவொரு முகாமும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறினார். இதனால் அந்த பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.