புதுச்சேரி: கழிப்பறைக்குச் சென்றிருந்த பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, அவர் அணிந்திருந்த  6 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறி உள்ளது. இது பொதுமக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தக்கத்தின் விலையால், தக்க நகை அணியவே பொதுமக்கள் அச்சப்படும் நிலையில், நூதனமான முறையில் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் கும்பலும் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இது புதுச்சேரி  புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பறைக்குச் சென்றிருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசு  அரசு பெண் ஊழியரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி, அவர் அணிந்திருந்த ஆறரை சவரன் நகையை  இரு இளம்பெண்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவத்தின்று நாகை மாவட்ட சமூக நலத்துறையில் பணியாற்றி வரும் சித்ரா, சென்னை செல்வதற்காக புதுச்சேரி வந்திருந்த நிலையில், அவர் கழிப்பறைக்கு சென்றபோது, அவரது பின்னால்  வந்த இரு இளம்பெண்கள், கழிப்பறைக்குள் அவரது முகத்தில் மிளகாய பொடி, தூவி, அவரது வாயை பொத்தி அவரிடம் இருந்த ஆறரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றனர்.

இதையடுத்து, நகையை பறிகொடுத்த பெண் சத்தம்போட்ட நிலையில், அங்கு வந்த மற்ற பெண்கள், அவரிடம் விசாரித்தபோது, இந்த கொள்ளை சம்பவம் தெரிய வந்தது. இதுதொடர்பான உடனே பேருந்து நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் துரிகதியில் செயல்பட்டு, அங்கிருந்த சிசிடிவி காமிராக்களை கண்காணித்தும், அங்கிருந்து வெளியே சென்ற பேருந்துகளையும் கண்காணிக்க உத்தரவிட்டனர்.

இதற்கிடையில், சந்தேகத்திற்கிடமான 4 பெண்கள் சி.சி.டிவி பதிவு மூலம் கடலூர் செல்லும் பேருந்தில் ஏறிச்சென்றதும் தெரிய வந்தது.  உடனே அந்த பேருந்தை விரட்டிச் சென்ற காவல்துறையினர்,அந்த பேருந்தை இடைநிறுத்தி,  சம்பந்தப்பட்ட 4 பெண்களை  மடக்கி கைது செய்தனர்.  விசாரணையில் அவர்கள்  நகையை கொள்ளையடித்தது உறுதி செய்யப்பட்டது. அவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகை பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களை சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம்  பெண்களிடையேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

[youtube-feed feed=1]