லப்புரம்

பரிமலைக்கு சென்று வந்த பெண்ணை அவர் மாமியார் தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிந்துவும் கனகதுர்க்காவும்

சபரிமலையில் இளம் பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆயினும் அதை எதிர்த்து பக்தர்கள் போராடி வருகின்றனர். சபரிமலைக்கு வந்த பல பெண்ணிய ஆர்வலர்கள் போராட்டக்காரர்களால் திருப்பு அனுப்பப் பட்டனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்த கேரள அரசு முயன்று வருகிறது. அதற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக் அகடுமையாக எதிர்த்து வருகிறது.

கனகதுர்க்கா

கடந்த 2 வாரம் முன்பு சுமார் 44 வயதான கனகதுர்க்கா என்பவர் தனது தோழி பிந்து என்னும் அதே வயதைச் சேர்ந்த பெண்ணுடன் சபரிமலை சென்றுள்ளார். காவல்துறை உதவியினருடன் அவர் சபரிமலையில் தரிசனம் செய்தார். அது வெளியே தெரிந்ததால் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடந்தன. அதற்கு பெண்ணிய ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சபரிமலையில் இருந்து திரும்பிய கனகதுர்க்கா 2 வாரங்களாக தலைமறைவாக இருந்துளார். அதன் பிறகு நேற்று முன் தினம் இரவு அவர் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரின்தாஸ்மன்னா என்னும் ஊரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார் அவர் வீட்டை அடைந்த உடன் அவரது மாமியார் தாறுமாறாக திட்டி சண்டை இட்டுள்ளார்.

கனகதுர்க்காவும் தகராறு செய்துள்ளார். ஆத்திரம் அடைந்த கனகதுர்க்காவின் மாமியார் ஒரு கட்டையால் அவரை தாக்கி உள்ளார். இதனால் கனகதுர்க்காவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.