மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பெண் மாரடைப்பால் உயிரிழந்தார்.

விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் சுயநினைவற்ற நிலையில் இருந்தவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாகக் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதான ராசாத்தி என்பது தெரியவந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மலேசியாவில் வீட்டு வேலை செய்து வந்த ராசாத்தி உடல்நல குறைவு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிய போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel