சென்னை: மாநில தலைநகரான சென்னையில் மக்கள் அதிகமாக இருக்கும் சைதாப்பேட்டை ரயில்நிலையத்தில் நேற்று இரவு பெண் ஒருவர் வெட்டி 4 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி என்ற இளம்பெண்,. இவர் ரயிலில் சமோசா மற்றும் பழங்கள் விற்பனை செய்பவர் என்று கூறப்படுகிறது. இவர் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று இரவு 4 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அலடியடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர்கள் வெட்டியதில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ரயில் நிலையங்களில் ஏற்கனவே பெண்கள் படுகொலை செய்யப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. ரயில் நிலையத்தில் சிசிடிவி பொருத்த நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாத ரயில்வே நிர்வாகம், இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.