ரு தலைக்காதலால், காதலி மீது திராவகம் வீசிய இளைஞர்களை அறிவோம்.

ஆந்திர மாநிலத்தில் ஒரு பெண், தன்னை ஏமாற்றிய காதலன் முகத்தில் திராவகம் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்னூல் மாவட்டத்தில் உள்ள நந்தியால் நகரை சேர்ந்த சுப்ரியா என்ற பெண்ணும், அங்கு மளிகை கடையில் வேலை பார்க்கும் நாகேந்தரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்.

‘’நமது காதலை உங்கள் பெற்றோர் ஏற்பார்களா?’’ என சுப்ரியா பலமுறை காதலனிடம் கேட்டுள்ளார்.

‘’ அதில் ஒன்றும் பிரச்சினை இருக்காது’’ என்று கூறி வந்த நாகேந்தர் அண்மையில் வேறு பெண்ணை கல்யாணம் செய்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுப்ரியா, காதலனுக்கு பாடம் புகட்ட நினைத்தார்.

தனது வீட்டு அருகே திராவகம் நிரப்பப்பட்ட பாட்டிலுடன் , மாஜி காதலன் நாகேந்தரை எதிர்பார்த்து காத்திருந்தார்.

இரு சக்கர வாகனத்தில் வந்த காதலன் முகத்தில் திராவகத்தை ’’ஸ்பிரே’’ செய்து விட்டு ஓடி விட்டார், சுப்ரியா.

முகத்தில் ஆங்காங்கே திராவக வீச்சில் காயம் அடைந்துள்ள நாகேந்தர் இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளார்.

-பா.பாரதி