தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள ஜங்கம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுதாராணி. இவர் தனது மகளின் பிரவத்திற்காக பக்கத்து கிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு தனது மகனுடன் சென்றுள்ளார். அங்கு மகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரசவம் முடிந்து மகனுடன் சொந்த ஊர் திரும்பியுள்ளார் சுதாராணி. ஆனால் ஊர் மக்கள் எல்லையிலேயே இவர்களை தடுத்து நிறுத்தி ஊருக்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளனர். இவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறி அவர்களை ஊர் எல்லையில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்தில் தனியாக தங்க வைத்து விட்டனர்.
இதனால் வீடு செல்ல முடியாமல் மகனுடன் தவித்து வருகிறார் தாய் சுதாராணி. அடுத்த வேளை உணவுக்கு மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார் சுதாராணி.
அரசு எத்தனையோ விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டாலும் பொது மக்கள் இந்த விசயத்தில் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியே தான் நடந்து கொள்கின்றனர்.
– லெட்சுமி பிரியா