மும்பை

ணவனின் ஒரு கோடி ரூபாயை திருடிக்கொண்டு காதலனுடன் ஓடிய பெண்மணியை காவல்துறையினர் விரட்டிப் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் வாபியில் வசிக்கும் இளம் பெண் ஒருவருக்கும் வல்சாத் நகரைச் சேர்ந்த இளைஞருக்கும் மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று அந்தப் பெண்  தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.

 

ஆனால் அவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில், வீட்டிலிருந்த ஒரு கோடி ரூபாய் பணத்தையும் காணாமல் கணவர் அதிர்ச்சி அடைந்தார்.

இளம்பெண் செல்வதாகக் கூறிய உறவினர் வீட்டில் விசாரித்தபோது, அவர் அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

இதனால் பதறிய கணவர், பெண்ணின் பெற்றோரிடம்  இந்த தகவலை தெரிவித்தார். பெண்ணின் தாய் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், அந்த இளம்பெண், தனது கல்லூரி காலத்தில் இளைஞர் ஒருவரை காதலித்தது தெரியவந்தது.

இது அவரது கணவருக்குத் தெரியவரவே குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதும் தெரிய வந்தது.

ஆகவே அந்த காதலனுடன் இளம்பெண் சென்றிருக்க வேண்டும் என்று தீர்மானித்த காவல்துறையினர் இருவரையும் வலைவீசித் தேடினர். இந்த கொல்கத்தாவுக்கு பயணிக்க இருந்த அந்த ஜோடியை மும்பை விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் பிடித்தனர்.

இருவரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது அந்த பெண்ணிடம் இருந்து ரூ.91 லட்சம் மட்டும் பறிமுதல் செய்தனர். தனது காதலனுக்கம் சேர்த்து விமான பயணச்சீட்டு வாங்குவதற்கு செயலவு செய்த்தோடு, மீதித் தொகைக்கு அமெரிக்க டாலராகமாற்றியதையும் அப்பெண் ஒப்புக்கொண்டார்.

 

அந்தப் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்ற பிறகு அவரை பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர். காதலனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கணவனின் ஒரு கோடி ரூபாயை அபேஸ் செய்து காதலனுடன் பெண்மணி ஓடிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.