கர்ப்பமானதால் வேலைக்கு கல்தா.. லேடி ரிப்போர்ட்டருக்கு நடந்த கொடுமை..
அரசாங்க அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் , கர்ப்பம் தரித்தால், ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது.
தனியார் நிறுவனங்களில் என்ன நிலை?
சின்ன சாம்பிள்.
அசாம் மாநிலம் கவுகாத்தியை தலைமை இடமாகக் கொண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்று செயல்பட்டு வருகிறது.
பெண் ஊழியர்கள், கர்ப்பம் அடைந்தால், அவர்களை வேலையை விட்டு நீக்குவது, அந்த டி.வி. சேனலில் ஒரு விதியாகவே கடைப்பிடிக்கப்படுகிறது.
அண்மையில் அவ்வாறு நீக்கப்பட்டவர், பெண் செய்தியாளர் ரஞ்சிதா ராபா என்பவர்.
ரஞ்சிதா, அந்த டி.வி.யில் கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
கர்ப்பம் ஆனதால், ‘’ வேலையில் இருந்து ராஜினாமா செய்யுங்கள்’’ என்று நிர்ப்பந்தம் செய்யப்பட்டு அண்மையில் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதனை எதிர்த்து அவர் தேசிய மகளிர் ஆணையத்தில் முறையிட்டார்.
இதையடுத்து அந்த டி.வி. சேனலுக்கு, ‘’ரஞ்சிதாவை வேலையை விட்டு நீக்கியது ஏன்? என விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பி உள்ளது, மகளிர் ஆணையம்.
– ஏழுமலை வெங்கடேசன்