டில்லி

கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்த உள்ளார்.

 

நாடெங்கும் கொரோனா தாக்குதல் நான்கு கட்ட ஊரடங்கையும் மீறி தொடர்ந்து வருகிறது..   இதனால் நாட்டு மக்கள் கடும் அச்சம் கொண்டுள்ளனர்   இந்த விவகாரத்துக்கு தீர்வு காண்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி நிபுணர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறர்.

அவ்வகையில் அவர் ஏற்கனவே உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரகுராம் ராஜனுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.  அதன் பிறகு நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.  இவை இரண்டும் இணையம் மூலம் ஒலிபரப்பப்பட்டது.

இன்று அவர் பொதுச் சுகாதார நிபுணர் ஆஷிஷ் ஜா மற்றும் சுவீடன் மருத்துவர் ஜோகன் கீசெக் ஆகியோருடன் உரையாட உள்ளார்.  இந்த மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தைகள் இணையம் மூலம் ஒலிபரப்பப் பட உள்ளது.  இந்த தகவலைக் காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.