
காவல் வாகனத்தில், காவல் சீருடை அணிந்த பெண் காவலர் ஒருவர் மது அருந்தும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குறிப்பிட்ட வீடியோவில் அவரது முகம் தெளிவாக தெரிகிறது. பின்னணியில ஆண் குரல், “கண்ணை காட்டுடி” என்கிறது. இவரும் கேமராவைப் பார்த்து போதையில் சிரிக்கிறார். பிறகு ஆண் குரல், “புல் அடிச்சிட்டா” என்கிறது.
இந்த பெண் காவலர், திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா, சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் என்று கூறப்படுகிறது.
“பணியில் இருக்கும் நேரத்தில் காவல் வாகனத்தில் சீருடையுடன் மது அருந்துவதும் இவரை இன்னொரு காவலர் செல்போனில் படம் பிடிப்பதும் அதிர்ச்சிகரமான விசயங்கள். இவர்கள் அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.
அந்த வீடியோ..