உயிர் தியாகம் செய்த 2 சிஆர்பிஎ ஃப் வீரர்களின் பெண் குழந்தைகளை தத்தெடுக்க பெண் மாஜிஸ்திரேட் முடிவு

Must read

பாட்னா:

உயிர் தியாகம் செய்த 2 சிஆர்பிஎஃப் வீரர்களின் பெண் குழந்தைகளை தத்தெடுக்கப்போவதாக பெண் மாஜிஸ்திரேட் இனாயத்கான் அறிவித்துள்ளார்.

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 49 வீரர்களுக்கு நாடு முழுவதும் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பீகாரில்-2011-ம் ஐஏஎஸ் பணியில் சேர்ந்தவர் இனாயத் கான்.
பீகாரில் ஐஏஎஸ் அதிகாரிகள் தான் மாஜிஸ்திரேட்களாகவும் உள்ளனர்.

அந்த வகையில், மாஜிஸ்திரேட்டாக இருக்கும் இனாயத் கான் இரண்டு வீரர்களின் பெண் குழந்தைகளை தத்து எடுக்க ப்போவதாக அறிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த உயிர் தியாகம் செய்த ரத்தன் மற்றும் சஞ்சய் ஆகியோரின் பெண் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் ஆகும் கல்விச் செலவை ஏற்பதாக அவர் அறிவித்தார்.

 

More articles

Latest article