கன்னூர்
கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் கள்ளக்காதல் கரணமாக தனது மகள்களையும் பெற்றோரையும் விஷம் கொடுத்துக் கொன்றுள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த சௌம்யா தனது பெற்றோர் மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் திருமணமாகி கணவனைப் பிரிந்தவர். இவருடன் இவருடைய பெற்றோர் குன்கி கண்ணன் (வயது 76). கமலா (வயது 68) ஆகியோரும் மகள்கள் ஐஸ்வர்யா (வயது 9) மற்றும் கீர்த்தனா (வயது 2) ஆகியோர் வசித்து வந்துள்ளனர்.
கடந்த 2012 ஆம் வருடத்தில் இவருடைய மகள் ஐஸ்வர்யா மரணம் அடைந்துள்ளார். அதன் பிறகு கமலா மற்றும் குன்கி கண்ணன் மரணம் அடைந்துள்ளனர். அதன் பிறகு கீர்த்தனாவும் மரணம் அடையவே அக்கம் பக்கம் உள்ளோர் சந்தேகம் அடைந்துள்ளனர். அனைவரும் விஷக் காய்ச்சலால் மரணம் அடைந்ததாகக் கூறியும் நம்பாத சௌம்யாவின் உறவினர் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினரிடம் சௌம்யா முன்னுக்குப் பின் முரணாக உளறி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சௌம்யாவிடம் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். முதலில் முரண்டு பிடித்த சௌம்யா பின்பு உண்மைய ஒப்புக் கொண்டுள்ளார். அவருக்கு சில வாலிபர்களுடன் கள்ளக்காதல் இருந்ததாகவும் அதை பார்த்து விட்ட ஐஸ்வர்யா பெற்றோரிடம் கூறியதாகவும் சௌம்யா தெரிவித்துள்ளார்.
மேலும் தனது தகாத உறவுகளாலேயே கணவர் தன்னை விட்டு பிரிந்ததாகவும் அதனால் மகள், தாய், தந்தை மூவரையும் ஒருவர் பின் ஒருவராக எலி விஷத்தை உணவில் கலந்து கொன்றதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். புதைக்கப்பட்ட பிரேதங்களை வெளியில் எடுத்து பரிசோதித்ததில் உடலில் எலி விஷம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சௌம்யா கைது செய்யபட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.