மதுரை : சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை , பெற்றோர்களே ஆவணக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த வீராளம்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயனின் மகள் சுகன்யா. இவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்தவர் பூபதி.
வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இருவரும், காதலித்தனர். இதற்கு சுகன்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய சுகன்யாவும் பூபதியும், கடந்த ஜனவரி மாதம் பெருந்துறையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.
இந்தநிலையில் சுகன்யா, கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி பூபதி மற்றும் அவரது பாட்டி பொன்னம்மாள் ஆகியோருடன் தனது சொந்த ஊரான வீராளம்பட்டிக்குச் சென்றுள்ளார்.
அப்போது சுகன்யாவின் தந்தை கார்த்திகேயன் மற்றும் குடும்பததினர் பூபதியையும் அவரது பாட்டியையும் அங்கிருந்து அடித்து விரட்டியுள்ளனர். பின்னர் பூபதியை மறத்து விடுமாறு கார்த்தியேகன் கூற அதற்கு மறுப்பு தெரிவித்த சுகன்யாவை அவரது பெற்றோரே எரித்து கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து பூபதி போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து சுகன்யாவை எரித்துக் கொலை செய்ததாக, சுகன்யாவின் தந்தை கார்த்திகேயன், தாய் செல்லம்மாள், அத்தை லட்சுமி, அண்ணன் பாண்டி ஆகியோரை கைது செய்துள்ளனர்.