சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களேயான ஆண் குழந்தையை மாஸ்க் அணிந்த பெண் 24மணி நேரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். கடத்திய பெண் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
குழந்தைகள் கடத்தல் அதிகம் நடைபெறும் மாவட்டங்களில் சேலம் மாவட்டம் முதன்மையாக உள்ளது. இங்குள்ள அரசு மருத்துவமனையில் அவ்வப்போது குழந்தைகள் திருடு போவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், கடந்த 9ந்தேதி அன்று மருத்துவனையில் பிறந்தே 5 நாளே ஆன ஆண் குழந்தையை ஒரு பெண் மருத்துவமனை ஊழியர்போல நடித்து, துமுகத்தில் மாஸ்க் அணிந்து வந்து கடத்திச் சென்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காமிரா மூலம் கடத்தியது யார் என்பதை தெரிந்து, அந்த பெண்ணை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் காவல் உதவி ஆணையர் ஷரி சங்கரி தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், குழந்தையை கடத்திய பெண் பிடிபட்டுள்ளார். அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். குழந்தையை கடத்திச் சென்ற பெண், சேலம் வாழப்பாடி அருகே உள்ள காரிப்பட்டியை சேர்ந்த வினோதினி என தெரியவந்தது. இவர் கடத்திய குழந்தைக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு வந்தபோது, காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், தனக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்து வந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடி சென்றது தெரிய வந்துள்ளது.
முன்னதாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மனைவி வெண்ணிலா. கர்ப்பிணியான இவர்2-வது பிரசவத்துக்காக சேலம்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 5-ம் தேதி அறுவைசிகிச்சை மூலம் வெண்ணிலாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்குள் வந்த மாச்க் அணிந்த பெண் , குழந்தைக்கு கண்கள் மஞ்சளாகஇருப்பதாகவும், பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறி, சிசுவை அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளார். அந்தப் பெண் மருத்துவமனை ஊழியர் என்று நம்பிய வெண்ணிலா, நீண்ட நேரமாகியும் குழந்தையை திரும்பக் கொண்டு வராததால், மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார்.
விசாரணையில் அந்த பெண் மருத்துவமனை ஊழியர்போல நாடகமாடி, குழந்தையைக் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தைகள் பிரிவு மற்றும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் குழந்தையை கடத்திச் செல்வது தெரியவந்துள்ளது. அவரைப் போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 24மணி நேரத்தில் அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
“சேலம், நாமக்கல்பகுதிகளில் அடிக்கடி குழந்தைகள் கடத்தப்படுவதும், குழந்தையை விற்பனை செய்வதும் தொடர்கிறது. அரசு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தல் கும்பல்,நோயாளிகளின் உறவினர்கள்போல நுழைந்து, பெற்றோர், மருத்துவ ஊழியர்கள் கண்காணிப்புஇல்லாத நேரங்களில் குழந்தைகளை கடத்திச் செல்வது வாடிக்கையாக உள்ளது.