அர்ச்சனா ராமச்சந்திரன்  என்கிற தமிழரசி துலுக்கானம்   என்பவர் மருத்துவராய் பணியாற்றி வருகின்றார்.

இவரின் கணவர் எம். கார்த்திக் மற்றும் மாமனார் ஆர். மனோகர் சமீபத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் அலுவலகத்திற்கு வந்து ஒரு திடுக்கிடும் புகாரினையும் அதற்கு தேவையான ஆதாரத்தையும் அளித்தனர்.

fake doctor 2
Representative image

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் கே.செந்தில் கூறுகையில், ” அர்ச்சனா ராமச்சந்திரனின் தந்தை ஒரு கிராம நிர்வாக அலுவலர். தமது மகள் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் மனமுடைந்தார். அந்நேரத்தில், 2003 ம் ஆண்டு தமிழரசி துலுக்கானம் எனும் பெண் மரணமடைந்தார். இதனைப் பயன்படுத்த நினைத்த  வி.ஏ.ஓ,  தமது மகளை ஆள் மாறாட்டம் செய்து எம்.பி.பி.எஸ் படிக்க வைத்தார்.
இவரிடம் தற்பொழுது எம்.பி.பி.எஸ் பட்டம், சிகிச்சையளிக்கும் அங்கீகாரம் மற்றும் தேவையான ஆவணங்கள் உள்ளன.
fake-doctor-shirt
Representative image

அர்ச்சனாவின் கணவரின் புகாரை ஆராய்ந்ததில் உண்மையைக் கண்டறிந்த மருத்துவக் கவுன்சில். அர்ச்சனாவால் பன்னிரெண்டாம் வகுப்பு சான்றிதழை சமர்ப்பிக்க முடியவில்லை.

எனவே  அவரது சிகிச்சை அளிக்கும் அங்கிகாரத்தை  ரத்து செய்துவிட்டது. இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர்  செந்தில் தெரிவித்தார்.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில்

சமீபத்தில் பீகாரில், தன்னைத் தேர்வில் தேர்ச்சி பெறவைக்குமாறு  உதவி கோரிய மகளை மாநிலத்திலேயே முதல் மாணவியாய் வரவைத்தார் ஒரு  தந்தை. அந்த  சர்ச்சையில் அம்மாணவி கைது செய்யப் பட்டார்.
தற்பொழுது ஆள் மாறாட்டம் செய்து மகளை மருத்துவராக்கிய தந்தையால் ஒருவர் சிறை செல்லவுள்ளார்.