கொல்கத்தா: பெண் முதல்வர்   மம்தா ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் மீண்டும் ஒரு கேங் ரேப் அரங்கேறி உள்ளது  சட்ட கல்லூரிக்குள்ளே மாணவி ஒருவர் 3 பெரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, பொதுமக்கள் போராட்டம் குதித்த நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை அறிவித்து உள்ளது. சட்டக்கல்லூரிக்குள்ளேயே சட்ட கல்லூரி  மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படத்தி உடள்ளது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்  கொல்கத்தாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொல்கத்தா ஆர்ஜிகார் மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் படித்துவந்த  பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2024ம் ஆண்டு  ஆகஸ்ட் 9 அன்று இரவு பணியில் இருந்தபோது பெண் பயிற்சி மருத்துவர்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டு சடலமாகக் கிடந்தார். விசாரணையில் அவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது.

இந்த கொடூர சம்பவத்தில் ஒரு கும்பலே ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் ஒருவர் மட்டுமே என குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த விஷயத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குறிப்பிட்ட மருத்துவமனைக்கு ஆதரவாக செயல்பட்டது பட்டவர்த்தனமாக தெரிய வந்தது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.  இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொல்லப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க மருத்துவர்கள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தற்போது சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவமும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவியை கல்லூரி காவலாளி அறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி மனோஜித் மிஸ்ரா, ஜைப் அகமது மற்றும் பிரமித் முகோபாத்யாய் ஆகியோர் ஜூன் 25 அன்று கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் முன்னாள் மாணவர் மற்றும் ஊழியர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மூன்று குற்றவாளிகளும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புகாரின்படி, அந்தப் பெண் புதன்கிழமை இரவு 7.30 மணி முதல் இரவு 10.50 மணி வரை தெற்கு கல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்திற்குள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாவலரின் அறைக்குள் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது குற்றவாளிகள், பாலியல் பலாத்கார சம்பவத்தை மொபைல்போனில் படம் பிடித்ததுடன், இணையதளத்தில் கசிய விடுவோம் எனக்கூறி மிரட்டியதாக பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, 3 பேரிடமும் மொபைல்போனை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர். பெண் முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சி செய்து வரும் மேற்கு வங்க  மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. முதல்வர் இப்போது இது ஒரு சிறிய சம்பவம் என்று கூறி பாதிக்கப்பட்டவருக்கு பணம் வழங்குவார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து  தேசிய மகளிர் ஆணையம்  தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோல்கட்டாவில் சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளோம். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளோம். இந்த சம்பவம் குறித்து விரிவான நடவடிக்கை எடுத்து மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.