ரேபரேலி,
உ.பி.யில் பாரதியஜனதா சார்பாக நடைபெற்ற பிரதமர் மோடியின் நன்றி அறிவிப்பு பேரணியில் கலந்துகொண்ட இஸ்லாமிய பெண்ணை, அவரது கணவர் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தனது கணவர்மீது அந்த பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
உ.பி. மாநிலத்தில் பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில், பாஜகவின் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பைரா என்ற இஸ்லாமிய பெண் கலந்துகொண்டார்.
இதுகுறித்து அறிந்த அந்த பெண்ணின் கணவன் தானிஷ், அந்த பெண்ணை 3முறை தலாக் கூறி விவாக ரத்து செய்துவிட்டதாக அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பைரா கூறியதாவது, என் கணவருக்கும், உறவினர் ஒருவருக்கும் இடையே தகாத உறவு உள்ளது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. எனது கணவர் அந்த பெண்ணுடன் இணைந்து வாழ, என்னை இந்த காரணம் காட்டி தலாக் செய்து செய்துவிட்டார் என்று கூறினார்.
ஆனால், பைராவின் குற்றச்சாட்டை மறுத்த அவரது கணவர் தானிஷ், தனது மனைவி சைரா தான் வேறு ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வருகிறார். அதை மறைக்கவே தனது மீது குற்றம் சாட்டுகிறார் என்று கூறியுள்ளார்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த விவகாரம் உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஏற்கனவே தலாக்குக்கு எதிராக மத்திய அரசு சட்டம் கொண்டு வர உள்ள நிலையில், தலாக் விவகாரத்து அரங்கேறி வருவது சமூக ஆர்வலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.