காந்தி நகர்
அமித்ஷா தேர்தல் ஆணையத்தில் அளித்த சொத்து விவரப்படி அவருடைய சொத்துக்கள் முன்னூறு சதவிகிதம் அதிகம் ஆனது தெரிய வந்துள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி குஜராத்தில் ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. பா ஜ க சார்பில் அதன் தலைவர்களில் ஒருவரான அமித்ஷா போட்டியிடுகிறார். அவர் வேட்பு மனுவுடன் தனது சொத்து விவரங்கள் தாக்கல் செய்துள்ளார். அதன் படி கடந்த ஐந்து ஆண்டுகளில் அவருடைய சொத்து முன்னூறு சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அவர் கொடுத்துள்ள தகவலில் கூறப்படுவது :
2012ஆம் வருடம் அவருடைய அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ1.9 கோடி, தற்போது ரூ.19 கோடி.
2012ஆம் வருடம் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 6.63 கோடி, தற்போது ரூ. 15.30 கோடி.
இதற்கு விளக்கமாக தந்தை வழியில் தனக்கு ரூ, 10.38 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.