சென்னை:
ர்டர்லி-களை திரும்பப் பெற உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

போலீஸ் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்ய, மாணிக்கவேல் என்ற அதிகாரிக்கு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இம்மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில், போலீஸ் உயர் அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்வதைக் கட்டுப்படுத்த, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் துறையில் ஒழுக்கத்தை பேண வேண்டும். அரசு இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் குமரேசன் ஆஜராகி, ”ஆர்டர்லி முறை தொடர்பாக, டி.ஜி.பி.,க்கு, உள்துறைச் செயலர் கடிதம் அனுப்பி உள்ளார். உயர் அதிகாரிகளுடன், முதல்வரும் ஆலோசனை நடத்தி உள்ளார். அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

அப்போது, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறியதாவது: போலீஸ் பணி என்ற கனவில் பயிற்சி முடித்து, மாதம் 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுபவர்களை, அதிகாரிகளின் வீட்டு வேலைகளை செய்வதற்காக, ஆர்டர்லிகளாக பயன்படுத்துவது, சட்டப்படி குற்றம்.ஆர்டர்லி வைத்திருக்கும் அதிகாரிகள் யாராக இருந்தாலும், வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை திரும்பப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.