டெல்லி: தொடர் வருவாய் இழப்பு எதிரொலியாக, லாக்டவுனை விலக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வலுத்துள்ளன.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன் காரணமாக பல மாநிலங்களில் வருவாய் குறைந்திருக்கிறது. அரசுக்கு சுமையும் அதிகரித்து இருக்கிறது.
இந் நிலையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், வருவாய் பற்றாக்குறையை மனதில் கொண்டு, லாக்டவுனை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கையை முன் வைத்து இருக்கின்றன.
குறிப்பாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகிய அரசுகள் லாக்டவுனில் இருந்து வெளியேறும் நடைமுறையை வகுக்க திட்டமிடுதலை தொடங்க வேண்டும் என்று கோரி உள்ளன.
சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், ஒரு சில நிதி நடவடிக்கைகளை அனுமதிக்க உடனடி அனுமதி கோரினார். மாநிலத்திற்கு ஏழை மக்களை பாதுகாக்க குறைந்த வருமானம் உள்ளது என்பதே காரணம். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து தமது மாநிலம் முற்றிலும் விடுதலை பெற்றுவிட்டது, ஆனாலும் மாநிலத்தின்
ராஜஸ்தானின் அசோக் கெலோட், புலம்பெயர்ந்த ஊழியர்களின் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்ட நேரம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மாநிலங்களின் இந்த கோரிக்கையை மத்திய அரசு உணரவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டார்.
நிதி தொடர்பான மாநில துணைக்குழுவின் கூட்டத்தில், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், காலவரையின்றி லாக் டவுன் நடைமுறையை நீண்ட நாட்கள் தொடரமுடியாது என்று கூறி இருக்கிறார். மாநிலத்தின் வருவாய் குறைந்து வருவதால், முக்கிய துறைகளின் செலவினங்களைக் குறைக்க பல நடவடிக்கைகளை அவர் கொண்டு வந்துள்ளார்.