புதுடெல்லி:
மக்களவையில் அமரப் போகிற நீங்கள் எல்லாம் காந்தி என பிரதமர் மோடி பிரக்யா தாக்கூரையும் சேர்த்துச் சொன்னார் பிரதமர் மோடி.
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுரான் கோட்ஸே, தேச பக்தி கொண்டவர் என தேர்தல் பிரச்சாரத்தின் போது போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா கூறினார்.
இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கருத்துக்கு பிரதமர் மோடியும் கண்டனம் தெரிவித்தார்.
பிரக்யாவை மன்னிக்க மாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பின்னர் பிரக்யாவும் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதில் பேசிய பிரதமர், மோடி பிரக்யா தாக்கூரையும் சேர்த்து மக்களவைக்கு வந்த காந்தி என்று குறிப்பிட்டார்.