புது டெல்லி:

ரடங்கு காரணமாக தனது குடும்பத்துடன் நடந்தே சொந்த ஊருக்கு சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி உதவி செய்துள்ளார்.

இந்தியாவிலும் ஊடுருவியுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 21 நாள் லாக் டவுனை அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நகரங்களில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றனர். போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் உத்தபிரதேசம், பிஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பலர் தங்கள் சொந்த கிராமங்களுக்கு நடந்தே செல்கின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதையறிந்த காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, புலம்பெயர்ந்த தொழிலாளரை கண்டுபிடித்து அவர் சொந்த ஊர் செல்ல வாகனத்தை அமைத்து கொடுத்து உதவியுள்ளார். இதுமட்டுமின்றி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 1000 பஸ்களை ஏற்பாடு செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.