சென்னை:

மோடியின் சமீபத்திய தேர்தல் பிரசாரம் எல்லைமீறி போய்க்கொண்டிருக்கிறது.  ஒவ்வொரு உரையிலும் வரம்புமீறி பேசி வருகிறார்… அவரது பேச்சு ஒருவரின்  சுதந்திரத்தை பரிசோதனை செய்வதாக உள்ளது முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்  கடுமையாக சாடி உள்ளார்.

தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் மோடியின் சமீபகால தேர்தல் பிரசாரங்களில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து, ராஜீவ் குடும்பத்தினர் மீது இழுக்கை ஏற்படுத்தி வருகிறார். இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில்,  முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் டிவிட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில்,

போபர்ஸ் வழக்கில் ராஜீவ் காந்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அறவே ஆதாரமற்றவை என்று டெல்லி உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது பிரதமர் மோடிக்குத் தெரியாதா?

இந்தத் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அன்றைய பாஜக அரசு முடிவெடுத்தது திரு மோடி அவர்களுக்குத் தெரியாதா?

இறந்தவர்களைப் பற்றி இழிவாகப் பேசக்கூடாது என்ற முதுமொழி பிரதமர் மோடிக்குத் தெரியாதா?

தேர்தலில் தம்முடைய கட்சியின் தோல்வி உறுதி என்ற அச்சம் திரு மோடியை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளிவிட்டது

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.