போபால்:
அசாம் தேசிய குடிமக்கள் இறுதிப் பதிவேடு காணாமல் போன விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கான விளக்கத்தை, தேசிய குடிமக்கள் பதிவேடு தரவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பிரபல சாப்ட்வேர் நிறுவனமான விப்ரோ விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் என்ஆர்சியை அமல்படுத்த மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அசாம் மாநிலத்தில் ஏற்கனவே கண்கெடுப்பு நடத்தப்பட்ட தரவுகள் (Data) திடீரென மாயமானது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், என்ஆர்சி தொடர்பாக தங்கள் நிறுவனத்துடனான போடப்பட்டுள்ள ஒப்பந்த நிலுவைத் தொகை செலுத்தாததால் அசாம் என்.ஆர்.சி தரவுகள் ஆஃப்லைனில் சென்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இது தொடர்பான தரவுகளை இணையதள சர்வரில் பதிவேற்றம் செய்து, ஆன்லைன் மூலம் பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யும் முறையை பிரபல சாப்ட்வேர் நிறுவனமான விப்ரோ மேற்கொண்டு வருகிறது. இதற்கான இந்திய அரசு, அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
அதன்படி அஸ்ஸாம் என்ஆர்சி இறுதி தரவுகள் ‘www.nrcassam.nic.in’ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த பதிவுகள் மாயமானதால் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், விப்ரோ நிறுவனத்துடனான ஒப்பந்தம் கடந்த ஆண்டு (2019) அக்டோபர் மாதமே காலாவதியாகி விட்டதால், இதுகுறித்து இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு நினைவூட்டியும், அவர்கள் ஒப்பந்தம் நீட்டிப்பது மற்றும் அதற்கான சேவை கட்டணம் செலுத்துவில்லை என்றும், இருந்தாலும் விப்ரோ நிறுவனம் ஜனவரி மாதம் வரை ஹோஸ்டிங் சேவையை ” தொடர்ந்து வந்தது என்று தெரிவித்து உள்ளது.
விப்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, என்ஆர்சி தொடர்பாக கடந்த “2014 ஆம் ஆண்டில் மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகள் வெளியிட்ட டெண்டரை விப்ரோ கைப்பற்றியதாகவும், அதன்பிறகே அசாமில் தேசிய குடியுரிமை பதிவு (என்.ஆர்.சி) திட்டத்திற்கான கணினி ஒருங்கிணைப்பாளராக விப்ரோ லிமிடெட் நியமிக்கப்பட்டது.
எங்களை இந்த பணிக்காக ந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் உள்துறை அமைச்சகம் நியமித்தது, மேலும் இந்த செயல்கள் அனைத்தும் இந்திய மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் கண்காணிக்கப்பட்டது. அதன்படி, ஒரு தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநராக, திட்டத்திற்கான தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில் விப்ரோவுக்கு பணி வழங்கப்பட்டது.
“இந்த சேவைகள் என்.ஆர்.சி உடனான ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி வழங்கப்பட்டன, அதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்காணிக்கப்பட்டனர். ஐ.டி சேவைகள் ஒப்பந்தம் 2019 அக்டோபரில் காலாவதியானபோது அதிகாரிகளால் புதுப்பிக்கப்படவில்லை.
“இருப்பினும், நல்லெண்ணத்தின் சைகையாக, விப்ரோ 2020 ஜனவரி இறுதி வரை ஹோஸ்டிங் சேவை கட்டணத்தை தொடர்ந்து செலுத்தியது. தகவல் தொழில்நுட்ப சேவை ஒப்பந்தம் அதிகாரிகளால் புதுப்பிக்கப்பட்டால் இந்த சேவைகளை தொடர்ந்து வழங்க விப்ரோ தயாராக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.